என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தனியார் நிறுவனத்தில் மோசடி
நீங்கள் தேடியது "தனியார் நிறுவனத்தில் மோசடி"
கிருஷ்ணகிரி அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஹவுசிங் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 47). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதில் ஓசூர் பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மனைவி அகிலா ஆகிய 2 பேரும் பங்குதாரர்களாக உள்ளனர்.
கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நிறுவனம் செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.
உடனே வெங்கடேஷ் நிறுவனத்திற்கு சென்று கணக்குகளை சரிபார்த்தார். அப்போது ஆதித்யாவும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து நிறுவனம் சார்பில் பணம் கொடுக்கல், வாங்கலில் ரூ.5 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடத்தில் வெங்கடேஷ் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரையும் வெங்கடேஷ் பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யாவும், அகிலாவையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். #Tamilnews

×

X